
வவுனியா மாவட்டத்தில் கோவில்குளம் கமநல சேவை நிலையத்தின் கீழ் அமைந்துள்ள வைரவப்புளியங்குளம் மற்றும் அதனைச் சூழவுள்ள அணைக்கட்டுகள், சுற்றுச்சூழல் ஆகியவற்றை தனது சொந்த முயற்சியால் தொடர்ச்சியாக பராமரித்து வருகின்றார் பொதுமகனான திரு. கந்தசாமி சதானந்தன். மேலும், அப்பகுதியில் திண்மக் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுப்பதற்காக பொதுமக்களிடையே விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்.
அவரது அர்ப்பணிப்புமிக்க சமூகச் சேவையையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக ஆற்றிய பெறுமதிமிக்க பங்களிப்பையும் பாராட்டி, வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்திப் பிரதி ஆணையாளர் திரு. கே. விமலரூபன் மற்றும் ஏனைய அதிகாரிகளால் அவர் இவ்வாறு கௌரவிக்கப்பட்டார்.
இவ்வாறான சமூகப் பொறுப்புணர்வுடன் செயற்படும் நபர்கள் அனைவருக்கும் முன்மாதிரியாக திகழ்கின்றனர்.

